ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி?

1 minute read
622 views
How to Become an Air Hostess

மிக நீண்ட காலமாக, ஏர் ஹோஸ்டஸ்கள் மக்களால் “வானத்தில் உள்ள பணியாளர்கள்” என்றே அழைக்கப்பட்டனர்.  அவர்கள் உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் பரிமாறுவதாலும் பயணிக ள் வசதியாக பயணிக்க உதவுவதாலும் அவ்வாறு அறியப்பட்டார்கள். ஆனால் ஏர் ஹோஸ்டஸ் நாம் நினைப்பதை விட முக்கியமானவர்கள். அவர்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்த பணியமர்த்தப்பட்ட பயிற்சி பெற்ற உதவியாளர்கள். நீங்கள் ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி என்ற கேள்விக்கு பதில் கண்டறிய நினைத்தால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இப்பக்கத்தில் ஏர் ஹோஸ்டஸ் பணிகளுக்கு உங்களை தயார் படுத்திக்கொள்ள தேவையானவை பற்றி ஒரு வழிகாட்டுதலை தருகிறோம்.

 ஏர் ஹோஸ்டஸ் என்பவர் யார்?

ஒரு ஏர் ஹோஸ்டஸ் அல்லது விமான உதவியாளர் அல்லது கேபின் குருவ்(Cabin Crew) போன்றவர்கள் பொதுவாக பயண விமானங்கள், வர்த்தக விமானங்கள், தொழில் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்த விமான நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட விமான பணியாளர்களே ஆவர். ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி என அறிந்துகொள்ள அவர்களின் விமான பயணத்தின் பொழுது அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று அறிந்துக் கொள்வது அவசியம்.

முக்கிய பணிகள் மற்றும் பொறுப்புகள்:

ஏர் ஹோஸ்டஸ்களுக்கு விமான சேவையின் பொழுது கொடுக்கப்படும் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி படுத்துவது: ஏர் ஹோஸ்டஸ்க்ல் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது, உணவு பரிமாறுவது மற்றும் உடல்நலம் குன்றிய பயணிகளுக்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருவது போன்ற செயல்களை செய்பவராகவே பார்க்கப்படுகின்றனர். அதைவிட முக்கிய பணி என்னவென்றால் விமானம் பறப்பதற்கு முன்பே அதன்  பாதுகாப்பு மற்றும் அவசர காலா செய்முறைகளை சரிபார்த்து அதை பயணிகளுக்கும் எடுத்துரைத்து  விமானத்தின் பாதுகாப்பை உறுதி படுத்துவதாகும்.

பயணிகளை வரிசைப்படுத்த உதவுதல்: விமானம் புறப்படும் முன் பயணிகள் அவர்கள் இருக்கைகளில் பாதுகாப்பாக அமர்ந்திருப்பதை உறுதி படுத்துவது மற்றும் விமானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி விமானத்தின் பாதுகாப்பை  உறுதிபடுத்துவது போன்றவை ஒரு விமான பணியாளரின் கடமையாகும். விமானம் தரை இறங்கிய பின்பு ஏர் ஹோஸ்டஸ்கல் பயணிகளின் உடமைகளை எடுக்க உதவி அவைர்களை பத்திரமாக விமானத்தில் இருந்து தரை இறக்க வேண்டும் 

விமான சேவைக்கு முன்பும் பின்பும் சோதனைகள் நடத்துவது: விமான சேவைக்கு முன் நடத்தப்பட வேண்டிய சோதனைகள்  பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதை உறுதி படுத்துவதாகும் மற்றும் விமான சேவைக்கு பின் நடத்தப்பட வேண்டிய சோதனைகள் பயணிகளின் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதை உறுதி படுத்துவது மற்றும் இருக்கைகளும் ட்ரேகளும் ஒழுங்காக உள்ளதை உறுதிப்படுத்துவதாகும். இது தவிர ஏர் ஹோஸ்டஸ்கல் விமானத்தின் உட்பகுதியில் சிறிய அளவிலான தூய்மை படுத்துதல் பணியையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி

நீங்கள் ஒரு ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கு இந்த விரிவான வழிமுறையை பின்பற்ற வேண்டும்:

  • ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கேபின் கிருவ் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் அல்லது அகாடமியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியை மேற்கொள்ளவும்.
  • நீங்கள் பணிபுரிய விரும்பும் விமான சேவை நிறுவனத்தை பற்றியும் அதிலுள்ள பதவிகள் பற்றியும் முழுமையாக ஆராயவும் .
  • விமான சேவை நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள கெரியர்(Carrer) பக்கத்தில் ஆட்களை பணியமர்த்துதலுக்கான செயல்முறை மற்றும் தேவையான தகுதிகள் பற்றி படித்து தெரிந்து கொள்ளவும் .
  • உங்களுடைய பாஸ்போர்ட் புதுப்பித்த நிலையில் உள்ளதை 12 மாதங்களுக்கு முன்பே உறுதி படுத்தி கொள்ளவும் .
  • உங்களுடைய விசா எந்த ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை இல்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தி கொள்ளவும்.
  • பிராண்ட்லைன் ஜாப் அல்லது பயனாளர்கள் உடன் நேரடி தொடர்பு உடைய வேளைகளில் இரண்டு வருட அனுபவம் இருந்தால் அது கூடுதல் தகுதியாக கருத படும்.
  • நீங்கள் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் எவ்வாறு நிறைய வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
  • நீங்கள் தேர்தெடுக்கப்பட்டால், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று இண்டர்வீயூ மற்றும் குரூப் டிஸ்கஷனில் (Group Discussion) பங்குகொள்ள வேண்டும்.
  • மேலும் உங்களுக்கான கிளியர் டிறகு டெஸ்ட்(Clear Drug Test) மற்றும் பின்னணி சரிபார்த்தல் போன்ற சோதனைகள் நடத்தப்படும்.
  • இன்டெர்வியூவில் தேர்ச்சி பெற்ற பிறகு, நீங்கள் விரும்பிய ட்ரைனிங் இன்ஸ்டிடூட்டில் பயில உங்களுக்கான நுழைவு சீட்டு கிடைக்கும்.

ஏர் ஹோஸ்டஸ் ஆகா வைப்படுபவை

ஏர் ஹோஸ்டஸ் ஆகா சில தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வது அவசியமாக உள்ளது. அதில் முக்கியமான விமான சேவைக்கு தேவைப்படுவது உடல், மருத்துவம் மற்றும் கல்வி தகுதிகள் 

 ஏர் ஹோஸ்டஸ் ஆகா தேவைப்படும் உடல் மற்றும் மருத்துவ தகுதிகள்

  • ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கான குறைந்தபட்ச வயது 18 அல்லது 21 ஆக உள்ளது. 
  • ஏர் ஹோஸ்டஸ் ஆக விண்ணப்பிப்பவர் குறைந்தது 5 தில் இருந்து 5’2 ஆக இருக்க வேண்டும். 
  • உங்களுடைய உயரத்திற்கு ஏற்ற உடல் இடை இருக்க வேண்டும். 
  • உடலில் கண்ணில் படத்தக்கவாறு எந்த ஒரு குறிகளோ, பச்சைகுத்துதலோ அல்லது வளையங்களை குத்தி வைத்திருப்பதோ இருத்தல் கூடாது. 
  • ஏர் ஹோஸ்டஸ் ஆக விண்ணப்பிப்பவர் உணவு மற்றும் குளிர் பானங்களை தூக்கி செல்ல கூடியவராக இருக்க வேண்டும் காண்டாக்ட் லென்ஸ் அணிவோருக்கு தூர மட்டும் கிட்ட பார்வை குறைந்தது 20/40 இருக்க வேண்டும்.
  • கேட்கும் திறனுக்கான ஒழி கசிவு இல்லாத  சோதனையில் ஒழுங்கான நிலையில் உள்ள காதுகள் 40 DB யாக ஒளிக்கசிவு உடைய சோதனையில் 500 அல்லது 1000 அல்லது 2000 Hz சராசரியாக கருதப்படும். 
  • ஏர் ஹோஸ்டஸ் ஆக விண்ணப்பிப்பவரிடம். மேலும்  அவசரகால ஜன்னல்களை தூக்குவதற்கும் அவசரகால கதவுகளை தீர்ப்பதற்கும் வலிமையுல்லவராக இருக்க வேண்டும். 
  • எந்த ஒரு மனநலம் சார்ந்த குறைபாடும் இருக்க கூடாது .
  • ஏர் ஹோஸ்டஸ் ஆக விண்ணப்பிப்பவருக்கு பார்வை திறன் பரிசோதனை மிகவும் அவசியமானது. கண்ணாடி மற்றும் DOT பிங்கர்பிரிண்ட் மற்றும் டிராக் சிகிரீனிங் டெஸ்ட்(Drug Screening Test) ஆகியவையில் தேர்ச்சி பெறவேண்டும். 

கட்டாயம் படிக்க வேண்டும்: பட்டபடிப்பிற்கு பின் ஏவியேஷன் கோர்ஸ்கள். 

 ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கான கல்வி தகுதிகள் 

  •  ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கு நீங்கள் ஒரு அங்கீகரிக்க பாட்ட கல்விநிலையத்தில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 
  • தனது மேல்நிலை வகுப்பை முடிக்காத விண்ணப்பதாளர்கள் GED டெஸ்டில் பங்குகொள்ள வேண்டும்  அதாவது GED என்றல் ஜெனரல் எடுகேஷனல் டெவெலப்மென்ட்  டெஸ்ட் ஆகும். 
  • விருந்தோம்பல்(Hospitality), பயணம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற விண்ணப்பத்தாளர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும். 
  • அடிப்படை கணினி அறிவும் மற்றும் கணித திறமையும் உடையவர்கள் சிறந்த சலுகைகளை பெறுவார்கள். 
  • சிறந்த ஆங்கில திறனும் கூடுதலாக ஒரு சர்வதேச மொழியை பற்றிய அறிவும் ஒரு கூடுதல் தகுதி ஆகும். 
  • விண்ணப்பதாளர் 3 முதல் 6 வாரங்கள் வரை குறிப்பிட்ட விமான சேவை நிறுவனத்தால் அவர்களின் மைய இடத்தில் நடத்தபடும் பயிற்சி வகுப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • முறையான பயிற்சியை முடிப்பதின் மூலம் குறிப்பிட்ட நாடுகளின் பொது விமான சேவைகளை ஒழுங்கு படுத்தும் அமைப்பான அமெரிக்காவின் FAA (தி பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டரேஷன்) போன்ற அங்கீகாரம் பெற்ற அமைப்புகளிடம் இருந்து சான்றிதழும் லைசென்சும் பெற உதவும்.  

படிக்க பரிந்துரைக்கப்பட்டவை : பட்ட படிப்பிற்கு பின்னான ஏவியேஷன் கோர்ஸ்கள். 

12 ஆம் வகுப்பிற்க்கு பின் ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி?

12ஆம் வகுப்பிற்கு பிறகு ஏர் ஹோஸ்டஸ் ஆகா, நீங்கள் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு ஏதேனும் ஒரு ஏவியேஷன் ட்ரைனிங் இன்ஸ்டிடூட்டில் விண்ணப்பிப்பது ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி மேற்கொள்ள அடிப்படையாகும். 12 ஆம் வகுப்பிற்கு பிறகு ஏர் ஹோஸ்டஸ் ஆகா பயிற்சி அளிக்கும் முன்னணி ட்ரைனிங் இன்ஸ்டிடுட்க்ளை இங்கே பார்க்கலாம். 

  • பசிபிக் ஏர்வேஸ்(Pacific Airways)
  • பிரான்க்பின் இன்ஸ்டிடுட் ஆப் ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங்(Frankfinn Institute of Air Hostess Training) 
  • அப்பிதிம ஏர் ஹோஸ்டஸ் அக்காடமி (Aptima Air Hostess Academy) 
  • லீவ்வெள் அக்காடமி(Livewel Acadamy)
  • PTC – ஏவியேஷன் அக்காடமி
  • இந்திரா காந்தி இன்ஸ்டிடுட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் (IGIA)
  • யூனிவேர்சல் ஏவியேஷன் அக்காடமி (UAA)

 நுழைவு தேர்வு என்று வரும்பொழுது  மேற்கண்ட  அக்காடமிகளில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி மேற்கொள்ள நீங்கள் எழுத்து தேர்விலும் இன்டெர்வியூவிலும் தேர்ச்சி அடைய வேண்டும்.

 நீங்கள்  ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி என்பது பற்றி உங்களுக்கு மேலும் உதவ உலக அளவில் கேபின் கிருவ் புரோக்ராம்கள் அளிக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களையும் கல்லுரிகளையும் கீழே பட்டியல் இட்டுள்ளோம். 

  • கிளந்தாலே கம்யூனிட்டி காலேஜ்(Glendale Community College).
  • மெரைன் வேலி கம்யூனிட்டி காலேஜ் (Moraine Valley Community College).
  • கம்யூனிட்டி காலேஜ் ஆப்  பால்டிமோர் கவுண்டி (Community College of Baltimore County).
  • குவிண்ட் டெக்கனிகள் காலேஜ் (Gwinnett Technical College).
  • ஆரஞ்சு கோஸ்ட் காலேஜ் (Orange Coast College).
  • பால் ஸ்டேட் யூனிவர்சிட்டி(Ball State University). 
  • லிபெர்ட்டி யூனிவர்சிட்டி (Liberty University).
  • இன்டர்நேஷனல் ஏர் அன்ட் ஹொஸ்பிடலிட்டி அக்காடமி (International Air and Hospitality Academy). 

இதை பார்க்கவும்: MBA இன் ஏர்போர்ட் மேனேஜிமென்ட். 

ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங் கோர்ஸ்கள் 

 இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கப்படும் சிறந்த ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங் கோர்ஸ்கல் கீழே குறிப்பிடபட்டுள்ளன. 

 ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங்கிற்க்கான டிப்ளோமாக்கள்(1 வருடம்)

  • இந்தியாவிலும் வெளிநாட்டிலும்  அளிக்கப்படும் சிறந்த  ஏர் ஹோஸ்டஸ் கோர்ஸ்கள் இங்கே. 
  • டிப்ளோமா இன் ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங் (Diploma in Air Hostess Training).
  • டிப்ளோமா இன்  கேபின் கிருவ் அல்லது பிலைட் அட்டெண்டன்ட் ட்ரைனிங் (Diploma in Cabin Crew or Flight Attendant Training).
  • டிப்ளோமா இன் ஏவியேஷன் & ஹாஸ்பிடலிட்டி மேனேஜ்மென்ட்(Diploma in Aviation and Hospitality Management). 
  • டிப்ளோமா இன் ஹாஸ்பிடலிட்டி & டிராவல் மேனேஜ்மென்ட் (Diploma in Hospitality and Travel Management).
  • PGDM இன் ஏவியேஷன் & ஹாஸ்பிடலிட்டி சர்வீஸ் (PGDM in Aviation and Hospitality Services).
  • PGDM இன் ஏர்போர்ட் கிரௌண்ட் சர்வீஸ் (PGDM in Airport Ground Services).
  • PGDM இன்  ஏவியேஷன், ஹாஸ்பிடலிட்டி, டிராவல் & கஸ்டமர்  சர்வீஸ் (PGDM in Aviation, Hospitality, Travel & Customer Service).

படிக்க வேண்டியவை: ஏர் டிக்கெட்டிங் கோர்ஸ்கள் 

 சான்றிதழ் படிப்புகள் (3 முதல்  12 மாதங்கள் வரை)

  • ஏர் ஹோஸ்டஸ் மேனேஜ்மென்ட் (Air Hostess Management).
  • ஏர் ஹோஸ்டஸ் ட்ரைனிங் (Air Hostess Training).
  • கேபின் கிருவ் ஓர் பிளிக்ட் அட்டெண்டன்ட் (Cabin Crew or Flight Attendant).
  • ஏர்லைன் ஹாஸ்பிடலிட்டி (Airlines Hospitality).
  • ஏவியேஷன் மேனேஜ்மென்ட் & ஹோச்பிடலிட்டி (Aviation Management and Hospitality).

ஏவியேஷனில் டிகிரி புரோக்ராம்கள் (2-3 வருடம்)

ஏர் ஹோஸ்டஸின் சம்பளம்

 ஒரு ஏர் ஹோஸ்டஸ் என்ற அடிப்படையில், நீங்கள் பெரும்பாலும் உங்கள் விமானசேவை நிறுவனத்தையே சார்ந்து உள்ளீர்கள். சராசரியாக  ஒரு ஏர் ஹோஸ்டஸ் 25,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் [தோராயமாக] வரை சம்பாதிக்கின்றனர் இதுவே உள்நாட்டு விமான சேவையில் மூத்த பதவியில் உள்ளவர்கள் 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாய் [தோராயமாக]  வரை சம்பாதிப்பார்கள். மேலும் தனியார் விமான சேவை நிறுவனங்கள் கொடுக்கின்ற சம்பள தொகை அதிகமாக உள்ளது அங்கே மாதத்திற்கு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் [தோராயமாக] வரை சம்பளம் தரப்படுகிறது. 

கட்டாயம் படிக்க வேண்டும்: ஏவியேஷன் கோர்ஸ்கள் 

தேவையான தகுதிகள்

பயணிகளுக்கு ஒழுங்கான சேவை வழங்குவதே  ஏர் ஹோஸ்டஸ்களை வெற்றிகரமான பணியாளர்களாக்கும் மற்றும் அதற்காக கடினமான சூழலில் பல வகையான வேலைகளை செய்ய சில திறன்கள் தேவை படுகின்றன. இக்கட்டுரையின் நோக்கம் ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி என்பதை சொல்வது மட்டும் அல்ல அந்த வேலைக்கு தேவையான திறன்களை எப்படி அடைவது என்பதும் ஆகும்.

 இங்கே ஏர் ஹோஸ்டஸ் ஆவதற்கு தேவைப்படும் திறன்களை பட்டியலிட்டுள்ளோம்:

  • ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் சிறந்த திறனுடையவராக இருக்க வேண்டும்.
  • தன் குழுவுடன் மிக விவரமாகவும் ஒழுங்குடனும் பணிபுரிய வேண்டும். வயதானோர், குழந்தைகள் மற்றும் உடல் நலமற்றோரிடம் பண்பாக நடந்து கொள்ளும் பழக்கம் வேண்டும்.
  • காற்றழுத்தம், இயந்திர கோளாறு போன்றன் அவசர காலத்திலும் பரபரப்பான சுழலிலும் தேவையான நடவடிக்கையை பொறுமையாகவும் பதட்டம் இல்லாமலும் செய்து பயணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி படுத்த வேண்டும்.
  • பிரச்சனைகளை சரி செய்யும் திறன். 
  • பன்முக தன்மையுடைய குழுக்களுடன் பணியாற்றும் திறன். 
  • தொழில் நிபுணத்துவம்.
  • அதிகமான வேலை நேரம் மற்றும் கடினமான வேலைகளை கொண்ட அட்டவணையை கையாள தேவையான உடல்நலம் கொண்டிருக்க வேண்டும்.
  • வேகமான மற்றும் இருக்கமான சூழலில் வேலை செய்வதற்கான வேகமாக சிந்திக்கும் ஆற்றல் மற்றும் நல்ல ஞாபகம் சக்தியை கொண்டு இருக்க வேண்டும்.

இதை பார்க்கவும்: கம்மெற்சியால் பைலட் கோர்ஸ்கள் 

ஏர் ஹோஸ்டஸாக இருப்பதால் கிடைக்கும் சலுகைகள்

 ஏர் ஹோஸ்டஸ் எப்படி ஆவது என்பதை அறிந்து கொள்ள, நீங்கள் அர்ப்பணிப்பு, வெகுமதிகள் மற்றும் கடமைகள் கொண்ட அந்த வேலையின் பண்பை புரிந்து கொள்ள வேண்டும் 

  • இந்த விமான பணியாளர் வேலை உலகில் பல அழகான இடங்களை நீங்கள் அறிந்துகொள்ளவும் அவற்றை சுற்றிப்பார்க்கவும் நல்ல வாய்ப்பை தருகிறது.
  • நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு வெவ்வேரு தொழில் பின்புலம்,தேசம் மற்றும் மொழி கொண்ட மனிதர்ளுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு ஏர் ஹோஸ்டஸாக, இது உங்களின் தொழில் ரீதியான  தொடர்புகளை வளர்க்கிறது.
  • உங்கள் சொந்த சுற்றுலாவிற்க்கான சலுகையோடு, உங்கள் குடும்பத்தோடு பயணம் செய்வதற்க்கான டிக்கெட்டுகளிர்க்கான சிறப்பு விலை குறைப்பும் கிடைக்கும்.
  • விமானசேவை நிர்வனங்கள் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு தேவையான மருத்துவ சலுகைகள் அல்லது காப்பீடு தருகிறது 
  • அது தவிர கேபின் குழுவினருக்கு சம்பத்துடன் தினசரி உணவிற்க்கான பணம், வெளியிடங்களில் தங்குவதர்க்கனா விடுதிகள், வேலை சார்ந்த பயணங்கள், கிரட்டுட்டு(gratuity), ஓய்வூதியம் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. 

நீங்கள் மேலும் அறிய விரும்பினால்? வெற்றிகரமான வேலைவாய்ப்பை ஏவியேஷன்(Aviation) துறையில் உருவாக்குவது எப்படி என்பதற்கான முழு வழிமுறையும் இங்கே 

ஏவியேஷன் துறையில்  பிரமாண்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ள சூழலில், ஏர் ஹோஸ்டஸ் ஆவது எப்படி என்பதை அறிந்துகொள்வதன் மூலமும் அந்த வேலை வாய்ப்பிற்கு தேவையானவற்றை அறிந்துகொள்ளவதன் மூலம் பெரிய பயன்களை அடைய முடியும்.  Leverage Edu வின் ஆலோசகர்கள் உங்களுக்கு தேவையான திறன்களை ஏற்படுத்தி தந்து விமான சேவையில் உங்களுக்கென்று ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி தர கூடிய ஒரு நல்ல ட்ரைனிங் ப்ரோக்ராமை தேர்தெடுக்க உதவுவார்கள். 

Leave a Reply

Required fields are marked *

*

*

15,000+ students realised their study abroad dream with us. Take the first step today.
Talk to an expert